/ சிறுவர்கள் பகுதி / குழந்தைப் பாடல்கள் முதல் தொகுதி
குழந்தைப் பாடல்கள் முதல் தொகுதி
புகழ்பெற்ற குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா 70 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்கு எழுதிய புத்தகங்கள் மொத்தமாக வெளியிடப்பட்டுள்ள முதல் தொகுதி நுால். மொத்தம் 135 பாடல்கள் உள்ளன. பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவு விருந்தாக உள்ளது.‘நெல்லுக்கு உள்ளே அரிசி இருக்கு சொல்லாதே நெருப்புக்குள்ளே சூடு இருக்கு சொல்லாதே’ இப்படி, சொல்லாததைச் சொல்லிவிட்டு முத்தாய்ப்பாக முடிக்கிறார். படிப்பவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் கருத்து உள்ள பாடல். ‘எம்மாம் பெரிய ரயில் வண்டி. சிவப்பு கொடிக்கு அஞ்சு பார்’ என்கிறது ஒரு பாடல். அந்த வரிகளில் குறும்பு கொப்பளிக்கிறது. எந்த காலத்திலும் பாட இனிக்கும் நுால். – சீத்தலைச் சாத்தன்