/ புத்தக மதிப்புரை / லாக்டவுனும் அப்புசாமியும்

₹ 90

கொரோனா காலக்கட்டத்தில் எழுதிய 25 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பாதி ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாத தம்பதியின் போராட்டத்தில், மோதிரத்தை விற்க கூறும் மனைவியை மையப்படுத்திய, ‘அடப்பாவி மனுஷா’ சிரிக்க, சிந்திக்க வைக்கிறது. முதலிரவு அறையில் தலையணைகளை வைத்து மந்திரம் கூறும் மனைவியின் செயல், மாமியார், மருமகள் உறவை புரிய வைக்கிறது. பணிக்கு செல்லும் தம்பதி குடும்ப பொறுப்பை பகிரும்போது நடக்கும் சவால்களை, ‘கோலம்’ கதை சுவாரசியத்துடன் கூறுகிறது. சாப்பாடு சம்பந்தமான சுவாரசியமான உரையாடல் ஆரோக்கியத்தை வலியுறுத்துகிறது. யூடியூப் பார்த்து சமைப்பது, அதனால் ஏற்படும் உபாதைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி