/ சிறுவர்கள் பகுதி / லிட்டில் பீலிங்ஸ், பிக் எக்ஸ்பீரியன்ஸ் (ஆங்கிலம்)
லிட்டில் பீலிங்ஸ், பிக் எக்ஸ்பீரியன்ஸ் (ஆங்கிலம்)
சிறுவர் – சிறுமியர் படிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு துணையுடன் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். வித்தியாசமான படங்களுடன் சுவாரசியமாக அமைந்துள்ளது.சிறுவர் – சிறுமியரை கவரும் வண்ணம் கதாபாத்திரங்கள் புனைந்து, 48 கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல் சிந்தனையை வளர்க்கும் படைப்புகளும் உள்ளன. கற்பனை திறனை வளர்க்கும் கதைகளும் உள்ளன.இந்த புத்தகம் நான்கு பிரிவுகளாக பகுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கதைகளில் உணர்ந்தவற்றை உரிய செயல்முறை பயிற்சியில் தெளிவு பெறும் உரிய பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கு திறனை வளர்க்க உதவும் நுால்.– ஒளி