/ கதைகள் / மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்

₹ 540

மகாபாரத கதையில் சூதாட்டம், துகிலுரிதல் நிகழ்வுகள் பற்றி விளக்கும் நுால். சகுனியின் வஞ்சகத்தால் சூதாட்டம் நடந்தது. பாண்டவர்கள் தோற்று அனைத்தையும் இழந்தனர். திரவுபதியை சபைக்கு அழைத்து, துகில் உரியும் காட்சி அரங்கேறியது. பகவான் கிருஷ்ணன் அருளால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாள். இந்த நிகழ்வுகள் வழியே மன்னர் ஆட்சி அட்டூழியங்களை விளக்குகிறது. மண்ணாசையால் கெட்ட துரியோதனனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது. கொடுஞ்செயலால் கவுரவர் சாம்ராஜ்யம் அழிந்ததை குறிப்பிடுகிறது. ஆசையும், வெறியும் அடங்காதவனுக்கு இதுவே கதி என்கிறது. வன வாசத்தில் பாண்டவர் மறைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறது. மகாபாரதத்தை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ