/ புத்தக மதிப்புரை / மகா பெரியவா (பாகம் – 16)

₹ 500

பிறக்கின்றபோது செய்தி ஆகிறோமோ இல்லையோ, மறைகின்ற போது போது செய்தி ஆகிவிட வேண்டும். இவ்வாறான செய்தி ஆகிறவர்கள் உலகில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருப்பார்கள். அவர்களில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர், மகா பெரியவர். அவர் சித்தி அடைந்த பிறகும் கூட, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாழும் காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். ஒரு பெண்ணுக்கு எது அழகு என்பதற்கு வித்தியாசமான விளக்கம் தெரிய வேண்டுமானால், மகா பெரியவர் சொல்லும் அந்த விளக்கம் தான் முற்றிலும் பொருத்தமாக இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், அனைத்து பெண்களின் கைகளிலும் இந்த புத்தகம் இருக்க வேண்டும். மகா பெரியவர் எல்லா பக்தர்களையும் சமமாகவே கருதுவார். அவருக்கு பிரதமரும் ஒன்றுதான். பாமரனும் ஒன்றுதான். பிரதமர் ஒருவர் காஞ்சி மடத்துக்கு வந்த போது, அவருக்கென எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், எல்லா பக்தர்களையும் போல அவரை நடத்திய ருசிகரமான ஒரு சம்பவத்தை இந்த புத்தகம் நமக்குச் சொல்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு புளிய மரத்துக்கும் அவர் முக்தி அளித்த நிகழ்வு நம்மை பெரும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. அமோக லட்சுமி என்றால் யார்? அவரை அறிமுகம் செய்து வைக்கிறார் இந்த புத்தகத்தின் மூலமாக, மகா பெரியவர். திக்குவாய் கொண்டவர்களை குணமாக்க பல மருத்துவர்களை தேடி அலைகிறார்கள், மக்கள். ஆனால் மகா பெரியவர் மகா மருத்துவர் அல்லவா! ஒரு எளிய மருந்து மூலம் திக்குவாய் கொண்டவரை குணப்படுத்தினார், அவர். அது என்ன மருந்து? இந்த புத்தகத்தில் விடை கிடைக்கிறது. நாமெல்லாம் காலை, மாலையில் வாக்கிங் போகிறோம். அந்த வாக்கிங்கை வலமாக மாற்ற பெரியவர் ஒரு 'ஐடியா' கொடுக்கிறார். இவ்வாறாக, மனதை அள்ளும் அற்புதங்கள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒத்தடம் கொடுக்கும் ஒப்பற்ற புத்தகம் இது. – தி. செல்லப்பா


முக்கிய வீடியோ