/ கவிதைகள் / மலர் துளிகள்

₹ 40

சமூக நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மிகுந்த நகைச்சுவை தொனியுடன் ஒவ்வொரு கவிதையும் ரசனைக்கு தீனி போடுகின்றன. அனுபவத்தின் வழியாக பாடங்களையும் கற்றுத் தருகின்றன. கவிதைகள் எழுதும் ஆர்வம், ‘தினமலர்’ நாளிதழ் தந்த உற்சாகத்தால் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்தில் செல்லும் போது, கண்டதையும் கேட்டதையும் மனதில் ஏற்று காட்சிகள் வெளிப்பட்டுள்ளன. விமர்சன பாணியில் எளிய கவிதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் திருமணம் என்ற பந்தத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை, ‘காத்தாடும் கல்யாண மண்டபம் களை கட்டும் பதிவு அலுவலகம் இளையோர் காதல்’ என எளிமையாக குறிப்பிடுகிறது. சின்ன சின்ன வரிகளில் பெரிய பொருளை காட்டும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை