/ கதைகள் / மலர்கின்ற பருவத்தில்
மலர்கின்ற பருவத்தில்
கண்ணியமிக்க கதாபாத்திரங்களுடன் தனித்துவம் மிக்கதாய் உருவாக்கப்பட்டுள்ள நாவல். வியாபாரம் நொடிந்த போதும் நம்பிக்கை இழந்துவிடாமல், தன் திறமையை மட்டும் நம்பி உழைக்கிற கதாநாயகன். ஒன்றை பத்தாகவும், பத்தை நுாறாகவும் ஆக்கும் தொழிலதிபர். அவருக்கு உற்ற தோழராய் அமைந்த மாமனிதர் என பாத்திரங்கள் உள்ளன. வில்லன் இல்லாமல் இருப்பானா... அதுவும் உண்டு. கடமையை சரியாகச் செய்ய வேண்டும் என்ற அறிவுரையை முன்வைக்கிறது. கதாநாயகியின் விசித்திர குணத்தை சுலபமாக மனதில் பதியும்படி வர்ணிக்கிறது. ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்து சொல்ல முடியுமா என்ற மலைப்பு ஏற்படுகிறது. உணர்ச்சி மிக்க வரிகளால், உயிரோட்டத்துடன் வரையப்பட்ட உன்னதமான நாவல். – டாக்டர் கார்முகிலோன்




