/ தீபாவளி மலர் / மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ் 2025

₹ 135

ஆன்மிக செய்திகள், அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ். ஏற்கனவே தீபாவளி கொண்டாடிய போது ஏற்பட்ட சுவைமிக்க அனுபவங்களை தாங்கிய கட்டுரைகள் சுவாரசியம் தருகின்றன. தனுஷ்கோடி புயலின் போது, 1964ம் ஆண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டம் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை முன்வைக்கிறது. இதுபோல் ஒரு கொண்டாட்டம் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. அது கடந்த காலத்தை இனிமையுடன் நினைவூட்டுகிறது. ரசனையுள்ள சிறுகதைகளும், சிறுவர் பகுதியும் கலகலப்பூட்டுகின்றன. வித்தியாசமான ரசனையில் அமைந்த கும்மிப்பாட்டு கலக்குகிறது. பல்துறை சார்ந்த புத்தகங்களையும் மலர்வனம் தீபாவளி சிறப்பிதழ் அறிமுகம் செய்துள்ளது. – ராம்


முக்கிய வீடியோ