/ அறிவியல் / ஆண் உடல் பதின்மப் பயணம்

₹ 80

ஆண் உடல் வளர்ச்சி குறித்து அறிவியல் பூர்வமாக விளக்கும் நுால். பதின்ம வயதில் ஆண் உடலில் உண்டாகும் மாற்றங்களை எப்படி அணுக வேண்டும் என சொல்கிறது. குழந்தை வளர்ப்பில் அக்கறை, கல்வி செயல்பாடு மற்றும் அனுபவ புரிதல்களை பகிர்கிறது. வாசிப்பு பழக்கம் பற்றி அறிவுரை தரப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கும் உடல் ரீதியான புரிதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பதின்ம வயதை அடையும் போது, உடலை அறிவியல் பூர்வமாக புரிந்து செயல்பட வழி வகைகள் கூறப்பட்டு உள்ளன. சுகாதாரம் பேணுவது, கட்டுப்பாடுகளை வரையறுத்து தெளிவது என உரிய வழிகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உடல் வளர்ச்சி பற்றி இரு பாலருக்கும் அறிவியல் ரீதியாக புரிதலை ஏற்படுத்த உதவும் நுால். – ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ