/ உளவியல் / மனம் என்னும் மாயத்துாதன்

₹ 150

மனதின் ஆழம், அகலம், வலிமை, ஆற்றலை உணர்த்தும் உளவியல் நுால். மனிதனிடம் உள்ள மனோ சக்தி மகத்தானது. அதை தட்டி எழுப்பிய நிகழ்வுகளை வரலாற்று பார்வையில் முன்வைக்கிறது. நேர்மறை கண்ணோட்டத்தில் மன உணர்வுகள் கட்டுக்குள் வந்து விடுவதாக கூறுகிறது. மனம் தான் எல்லாம் என்பதை உளவியல் முறையில் நிரூபிக்கிறது. மனதின் இயல்புகளை காட்டுவதுடன், அதை தட்டி எழுப்பும் முறை, பொறுப்பாக நடத்தல், எண்ணங்களின் தொகுப்பு, இசைவு, வெளிச்சம், உயிர்ப்பித்தல் போன்ற தலைப்புகளில் மனதின் ஆற்றல் முன்வைக்கப்பட்டுள்ளன. மன வலிமையே வெற்றியை நோக்கும் என்கிறது. மனதின் வழியாக மகத்தான சாதனை புரியும் மந்திரத்தை சொல்லும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ