/ உளவியல் / மனமே! உன்னுடன் சில நிமிடங்கள்...

₹ 250

சிந்தித்து உணர்வுபூர்வமாக செயல்பட உதவும் மனதை, அறிவியல் அடிப்படையில் விளக்கி நம்பிக்கை ஏற்படுத்தும் நுால். மனம் என்பது என்ன, எங்கே இருக்கிறது என தெளிவுபடுத்துகிறது. உளவியல் கல்வி மற்றும் ஆய்வு வரலாற்றை அறிய தருகிறது. உளவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது. அது சார்ந்த பழக்க வழக்கங்களை தெளிவுபடுத்துகிறது. மன உளைச்சல், அழுத்தம், பதற்றம், விரக்தி, சோர்வு போன்ற பாதிப்பின் விளைவுகளை அறிய தருகிறது. குழந்தைகளுக்கு உற்சாகம் தந்து, பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. மனதை அறிந்து நம்பிக்கையுடன் முன்னேற வழிகாட்டுகிறது. உளவியல் சார்ந்து எளிய நடையில் அமைந்துள்ள அறிவியல் நுால். – மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை