/ கவிதைகள் / மனதை பாரமாக்கிய புத்தக வரிகள்

₹ 110

கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம், 425 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பல சிந்தனைகளை தாங்கியுள்ளன.‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அக்காலம்; கூடி வாழ்ந்தால் கொரோனா வாழ்வது இக்காலம்’ என்ற கவிதை நகைச்சுவையாக இருந்தாலும், சமீபத்திய நிகழ்வை எண்ணும் போது பொருளின் ஆழம் புரிய வரும்.‘பல் பழுதானால் நீக்கிவிடலாம்; சொல் பழுதானால் சுமைகள் கூடிவிடும்’ என்ற கவிதை, கடும் சொற்களால் ஏற்படும் மனச்சுமை கொடிது என உணர்த்துகிறது. ஒன்றில், ‘தலை அளவு தனம் இருந்தாலும் உழைக்க மறுக்காதே!’ என உழைப்பின் முக்கியத்துவத்தை தாங்கி நிற்கிறது. இவ்வாறு சிந்தனை ஊற்றாய் திகழ்கிறது. இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை அடிநாதமாக கூறியுள்ளது.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை