/ புத்தக மதிப்புரை / மாணிக்கவாசகரின் திருவாசக சாரம்

₹ 220

மாணிக்கவாசகரின் திருவாசக பாடல் கருத்துக்களை எளிமையாக தரும் நுால். சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் பாடல்களுக்கு எளிமையாக விளக்கம் தருகிறது. திருவாசகம், திருவண்டப் பகுதியில், ‘கருணை வான் தேன் கலக்க, அருளொடு பரா அமுது ஆக்கினன்’ என்பதை, ‘கருணை கொண்டு அருளொடு நோக்கி திருவருள் தந்து மருவி நின்றாயே’ என்று எளிமையாக கூறுகிறது. திருவாசகத்தில், ‘பாரொடு விண்ணாய் பரந்த எம்பரனே, சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே’ என்ற பாடலை, ‘பாரொடு விண்ணாய் பரந்த பராபரனே, பெருந்துறை உறை சிவனே சிவபுரத்து அரசே’ என்கிறது. இதுபோல் திருவாசக சுவையை தரும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


முக்கிய வீடியோ