/ வாழ்க்கை வரலாறு / மனித நெறி வளர்ப்போம்! மக்களாட்சி காப்போம்!!
மனித நெறி வளர்ப்போம்! மக்களாட்சி காப்போம்!!
வள்ளுவர்-, வள்ளலார் வழியில் மனித நெறி போற்றுதல் குறித்தும், தெய்வ பக்தியும்-, தேச பக்தியும் தேவை என்றும் கூறும் நுால். மக்களிடம் மக்களாட்சி மாண்பு குறித்து விளக்கம் செய்வது, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோர் கடமை என்கிறது.சுதந்திரத்துக்கு போராடிய வ.உ.சி., செண்பகராமன், நேதாஜி, மாடசாமி பிள்ளை, பகத் சிங், சுக தேவ் தேசபக்தித் தெய்வங்கள். வேற்றுமையில் ஒற்றுமை தான் ஒருமைப்பாடு என்கிறது. மாநில சுயாட்சியில் உறுதி வேண்டும் என வலியுறுத்துகிறது.மதவாதமே பயங்கரவாதத்திற்கு பாதை ஆகிறது என விளக்குகிறது. பணம் வாங்கி ஓட்டு போட்டால், வெற்றி பெற்றவர் குற்றவாளியாவது பற்றி எடுத்துரைக்கும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து