/ புத்தக மதிப்புரை / மனித வெடிகுண்டாக மாறிய மணிவண்ணன்
மனித வெடிகுண்டாக மாறிய மணிவண்ணன்
வீரம், தியாகம், காதல், நாட்டுப்பற்று, பக்தி, பாசம், நட்பு, காதல் அடிப்படையில் அமைந்த நாவல். பயங்கரவாத குழு ஒன்று குடியரசு தினவிழாவில் ஊடுருவுகிறது. மனித உயிர்களை பலி வாங்க திட்டமிடுகிறது. ராணுவ கேப்டன்கள் ரேவதி, பிரபு மதி நுட்பத்தால் அதை முறியடிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ராணுவத்தின் அறிவாற்றலை விளக்குகிறது. பின்னணியில் பக்தி இழையால் பின்னப்பட்டுள்ளது. நாட்டுக்காக அர்ப்பணித்த கேப்டன் ரேவதியின் தியாகம் கலங்க வைக்கிறது. அடுத்து என்ன என ஆர்வமுடன் வாசிக்க துாண்டுகிறது. இலங்கை பேச்சு வழக்கு முழுதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுப் பற்றை வலியுறுத்துகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நாவல். – வி.ராமலிங்கம்




