/ கதைகள் / மண்ணுக்கேற்ற பொண்ணு

₹ 70

இலங்கை தமிழில் சிந்தையை கவரும் வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உயிரை துச்சமாய் மதித்து, நாட்டிற்காக போராடி நட்சத்திரமாய் ஒளி வீசும் நர்த்தகி சித்ராங்கி என்ற கதாபாத்திரம் மனதில் நங்கூரமிட்டு தங்கி விடுகிறது. ஆழ்ந்த காதலில் தோய்ந்த உணர்வுகளை அள்ளி தெளித்து, எள் முனையளவு கூட விரசம் தட்டாமல் எழுதி இருப்பது நல்லறிவிற்கு சான்று பகர்கிறது. அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களை, தகுந்த சொல்லாடலில் சொல்லப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் சொல்லும் வார்த்தைகள், இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தி சிலிர்க்க வைக்கின்றன. அத்தனை கதைகளும் ரத்தினமாய் ஒளி வீசி உயிரோட்டமாய் நிற்கின்றன. வீரிய வார்த்தைகளால் வடிக்கப்பட்ட கதை தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை