/ கட்டுரைகள் / மனோன்மணீயம் விளக்கமும்–விமர்சனமும்
மனோன்மணீயம் விளக்கமும்–விமர்சனமும்
நாடக வடிவில் வெளிவந்துள்ள நுால். பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக இருந்த பெருமைக்குரியது. மனோன்மணீயம்- விளக்கமும் விமர்சனமும் என்ற தலைப்பில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறும், தமிழ் தொண்டும் விரிவாக தரப்பட்டுள்ளது. ஆங்கிலக் கவி மரபையும், நாடக போக்கையும் தமிழில் கொண்டு வந்துள்ளதை விளக்குகிறது. மனோன்மணீய கதைச்சுருக்கமும், கதாபாத்திர பண்பு நலன்களும் விவரிக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில் உ.வே.சாமிநாதையருக்கு எழுதப்பட்ட கடிதம் அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. தமிழார்வலர்களை பெரிதும் கவரும் நுால்.– புலவர் சு.மதியழகன்