/ பயண கட்டுரை / மொரீசியசு நாடும் சைவத்தமிழ் மாநாடும்
மொரீசியசு நாடும் சைவத்தமிழ் மாநாடும்
மொரீஷியஸ் நாட்டில் பயணம் செய்த அனுபவத்தில் கிடைத்த செய்திகளை தொகுத்து தரும் நுால். மொரீஷியஸ் நாடு அடிமையாக இருந்த நிலை, சுதந்திரம் வாங்கிய தகவல்கள் உள்ளன. சமயம் தொடர்பான நிகழ்வுகள், விழா கொண்டாட்டங்கள் பற்றியும் உள்ளன. இவற்றின் வழியாக தமிழ் கலாசாரம் பரவி வருவது ருசிகரமான தகவல்களாக பதிவாகி உள்ளன. அயல் நாடுகளில் சைவத்தமிழ் மாநாடுகள், அவற்றுக்கு மக்களின் வரவேற்பு, விருந்தோம்பல் என தகவல்கள் நிறைந்துள்ளன. கண்டுகளித்த சுற்றுலா மையங்களில் ஆர்வ மிகுதியால் கற்றவற்றையும் தெரிவிக்கிறது. அவ்வை திருக்கோவில் பற்றி வர்ணிக்கிறது. நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற நிறைவை தரும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்