/ அறிவியல் / மழலை அறிவியல்

₹ 150

அறிவியல் பார்வையை முன்வைத்துள்ள பாடல்களின் தொகுப்பு நுால். ஒழுக்கம், அறத்தை போதிப்பதுடன் அறிவியல் உண்மைகள் மனதில் பதியும் வகையில் புனையப்பட்டுள்ளது. சூரிய மண்டலம், கோள்களின் தோற்றம், உலகம் தோன்றிய விதம், உயிரினங்களின் வளர்ச்சி, உயிரின் இயக்கம், கணிப்பொறி காலம், உடல்நலம், மருத்துவம் போன்ற தலைப்புகளில் பாக்கள் உள்ளன.மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் மிக அழகாக ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளன. சந்தம் நிறைந்த பாடல்கள் மழலைகளின் மனதில் பதியும். இந்த பாக்களை மெட்டமைத்து இசையுடன் பாடவும் ஏற்ற வகையில் உள்ளது. பாடல்கள் சமூக அறம், தனிமனித ஒழுக்கம் மற்றும் அறிவியலை பரப்பும் வகையில் உள்ளன. மழலையருக்கு அறிவூட்டும் நுால்.– ராம்


புதிய வீடியோ