/ மாணவருக்காக / மேடைப் பேச்சில் வல்லவராக திகழ வேண்டுமா?
மேடைப் பேச்சில் வல்லவராக திகழ வேண்டுமா?
மேடைப் பேச்சு பயில விரிவான வழிகாட்டி நுால். தேவையான ஆலோசனை, பயிற்சிகள் பற்றி விவரிக்கிறது. பேச்சை அமைப்பது, தயாராவது உள்ளிட்ட அம்சங்களை தருகிறது.பேசும் கலையில் ஆர்வம், பயிற்சி முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதற்கு உரிய நம்பிக்கையை வளர்க்கும் கருத்துக்களில் கவனம் செலுத்த பரிந்துரைக்கிறது. குறிப்புகளை பார்த்து படிப்பதை தவிர்க்க அறிவுறுத்துகிறது.உரை துவக்கம், தொடர்ச்சி மற்றும் முடிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பயத்தை வெல்வது, வாசிப்பதால் திறனை வளர்ப்பது, எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துவது பற்றிய நுணுக்கங்களை வழங்குகிறது. நேரத்தை மீறுதல் தவிர்க்க வேண்டியது என கோடிட்டுக் காட்டும் நுால்.-– வி.விஷ்வா