/ அரசியல் / மேயர் பதவியல்ல... பொறுப்பு
மேயர் பதவியல்ல... பொறுப்பு
மேயராக பொறுப்பு வகித்து, திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்களை சுயசரிதை போல் எடுத்துரைக்கும் நுால். அயல்நாட்டு கருத்தரங்கங்களில் பங்கேற்று கற்றதும், பெற்றதும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த புத்தகம், 29 தலைப்புகளாக எழுதப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இயலிலும், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியதில் காட்டிய ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்க எடுத்த நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.சென்னை மேயர் என்ற கவுரவத்தை பதவியாக பயன்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகள், மக்கள் குறைகளை தீர்க்கும் பொறுப்பாக எண்ணி நிறைவேற்றியதில் கிடைத்த அனுபவம் எளிய நடையில் உள்ளது. மக்கள் பணியை நிறைவேற்றும் அணுகு முறையை விவரிக்கும் அனுபவங்களின் தொகுப்பு நுால்.– மதி