/ வர்த்தகம் / பணப் பழக்கம்
பணப் பழக்கம்
பணம் சேர்க்கும் நடை முறையை அறிமுகம் செய்யும் நுால். பணத்தை சேர்க்க திட்டமிடல், வசப்படுத்தும் வழிகள், காப்பது எப்படி போன்ற விபரங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக வாழ்வில் சந்திக்கும் சங்கடங்கள், அவமானம், இன்பம், துன்பத்துக்கு பணம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறது. பணம் பற்றி நிலவும் பல்வேறு சந்தேகங்களை தீர்க்கிறது. எதற்கெல்லாம் பணத்தை செலவிட வேண்டும், எதற்கெல்லாம் செலவிடுவது வீண் என்பதை எடுத்துரைக்கிறது. மாதாந்திர செலவுகளை திட்டமிட அறிவுரைக்கிறது. சேமிக்கும் வழிமுறைக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. மருத்துவம், காப்பீடு, தொழில் லாபம், ஓய்வூதியம் போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளது. பணத்தை ஈட்டி பாதுகாக்கும் நடைமுறை, பெருக்கும் வழிமுறைகளை விளக்கியுள்ள நுால். – முகில்குமரன்




