/ கதைகள் / முடிவுறா முடிவு

₹ 160

சாகச சிறுமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். அமெரிக்கா, டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து, கனடா நோக்கி தன்னந்தனியே மிதிவண்டியில் பயணிக்கிறாள் கதாநாயகி சிறுமி. அடர்ந்த காட்டில் மரம், செடி, கொடி மண்டிய புதர், வண்ண பூக்கள், சிறகடிக்கும் பட்டாம் பூச்சி, அச்சம் ஊட்டும் விலங்கினங்கள், விந்தை மனிதர்களை கண்டு ரசிக்கிறாள். அதில் ஏற்பட்ட உணர்வுகள், எதிர்கொண்ட இன்னல்களை எதிர்கொண்ட விதம் என பல்சுவையை பிழிந்து தருகிறது. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை முன் நிறுத்துகிறது. துணிச்சல், தன்னம்பிக்கை, அறியும் ஆவலை செயல்படுத்தும் வழிமுறைகள் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ள நாவல். – சிவா


புதிய வீடியோ