/ கதைகள் / நாளைய சர்க்கார்

₹ 250

அதிகாரத்துடன் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டும் நாவல். தமிழகம் எப்படி மாற வேண்டும் என்பதை மையமாக உடையது. அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை படம் பிடித்து காட்டுகிறது. கனிமவள கொள்ளை, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, இதற்கு துணை போகும் தாதாக்கள், அதன் பின்புலமாக நிற்கும் ஊழியர்கள் என படிப்படியாக விரிகிறது. இந்த நிலையை புது மாதிரி அமைந்த அமைச்சரவை மாற்றிக் காட்டுவதாக புனையப்பட்டு உள்ளது. ஐ.பி.எஸ்., கதாபாத்திரம் நாட்டுக்காக போராடியதை படம் பிடிக்கிறது. மத்திய ஆட்சியை பகைத்து, பெரிய அளவில் பணிகளை மாநில அரசு செய்ய முடியாது என சுட்டிக் காட்டுகிறது. கொள்ளையடித்த அரசியல்வாதிகள் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதை படம் பிடிக்கும் நாவல். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ