/ கதைகள் / நாள்தோறும் நல்ல கதை
நாள்தோறும் நல்ல கதை
நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 366 கதைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒன்று என்ற வீதத்தில் ஆண்டு முழுதும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துகள், தன்னம்பிக்கையூட்டும் செய்திகள், அறிவுரைகள் நிறைந்துள்ளன. துறவியர், மகான்கள், மேல்நாட்டு அறிஞர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் கதை போல் கூறப்பட்டுள்ளன. புராண இதிகாச செய்திகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியுடன் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற நுால். – வி.ராமலிங்கம்




