/ புத்தக மதிப்புரை / நம் உரத்தசிந்தனை தீபாவளி சிறப்பிதழ்

₹ 25

வெளிநாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் பற்றி புதிய தகவல்களை தருகிறது நம் உரத்தசிந்தனை தீபாவளி சிறப்பிதழ். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கோலாலம்பூர், கனடா, குவைத் நாடுகளில் தீபாவளி எப்படி எல்லாம் கொண்டாப்படுகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. வாசகர்களின் அனுபவங்கள் கலகலப்பூட்டுகின்றன. வாணவேடிக்கை, விருந்து, பரிசு என குதுாகலத்தை கூறுகிறது. ஒரேநாடு ஒரே தேர்தல் மற்றும் மும்மொழி கற்றலில் தெளிவை ஏற்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. நகைச்சுவை துணுக்குகள், நினைவுகளில் இனிக்கும் அனுபவங்கள், சிறுகதைகள் நிறைந்துள்ளன. சிந்தனையைத் துாண்டும் வகையில் கேள்வி – பதில்களும் இடம் பெற்று உள்ளன. நொறுக்கு செய்திகளுடன் இனிய வாசிப்பு அனுபவத்தை தருகிறது நம் உரத்தசிந்தனை தீபாவளி சிறப்பிதழ். – கவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை