/ சிறுவர்கள் பகுதி / நந்தனும் வானுலகப் பறவையும்

₹ 220

சிறுவர்கள் உலகத்தை வெளிப்படுத்தி படைக்கப்பட்ட நாவல். வீட்டு தோட்டத்தில் வழிதவறி வந்த பறவை குஞ்சை, பெற்றோரிடம் கொண்டு சேர்க்கும் சிறுவர், சிறுமியர் சாகச பயணமாக மலர்ந்துள்ளது. எதிர் கொள்ளும் ஆபத்தை திகிலுாட்டும் காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறது. வான்வெளியில் பறக்கும் கழுகுகள் மனிதர்கள் போல் உரையாடுவது அபூர்வ சக்தியாக உள்ளது. விறுவிறுப்பான உரையாடல்கள் உள்ளன. விசித்திர உலகுக்கு சிறுவர்களை அழைத்து செல்வது தன்னிலை மறக்க வைக்கிறது. நல்லவை வெல்ல வேண்டும்; தீயவை தோற்க வேண்டும் என்ற விருப்பத்தில் நியாயம் இருப்பதை கூறுகிறது. மலைக்கழுகு, தீப்பறவை, மனிதனை விழுங்கும் பூக்கள் கவரும் வகையில் உள்ளன. கற்பனை திறன் மிக்க நாவல் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை