/ கவிதைகள் / நட்சத்திரங்களில் பதித்த சூரியன்

₹ 99

இனிய காதல் கவிதைகளின் தொகுப்பு நுால். திங்களை சமைப்பவள், பூக்காத சொல், ஒளிரும் கனவுகள், முத்தத்தின் நிறம், களவாடப்படும் மவுனங்கள், காதலெனும் தியானம், தேனீர் மழை, காத்திருத்தல், பச்சை ஆறு, இன்னும் கொஞ்சம் துாறல், ராப்பாடியின் கீதம் உட்பட, 28 வித்தியாசமான தலைப்புகளில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன. உலகில் உயிரினங்களிடம் பேரொளியாக இருக்கும் அன்பை நெகிழ்வுடன் வெளிப்படுத்துகின்றன. நிகழ்காலத்தில் வாழும் நுட்பத்தை எளிமை நிறைந்த சொற்களால் ஓவியமாக செதுக்குகிறது, ‘பூக்கும் கல்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை. மனதில் போதாமையை, ‘தேவை தேவை என பல்லாங்குழி ஆடும்’ என வடித்துக் காட்டுகிறது. அன்பின் அடிச்சுவடுகளை உற்று நோக்கி படைத்துள்ள கவிதை நுால். – மதி


புதிய வீடியோ