/ ஜோதிடம் / நட்சத்திரங்களின் அடிப்படையில் விரிவான திருமணப் பொருத்தம்
நட்சத்திரங்களின் அடிப்படையில் விரிவான திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம் குறித்த அடிப்படை ஜோதிட விளக்கம் அடங்கிய நுால்.ஜோதிடத்தின் அடிப்படை விளக்கம் முதல் பகுதியில் உள்ளது. மானிடர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்வுகளை சரியான கால நேரத்தில் செய்தால், நன்மை உண்டு என விளக்குகிறது. நட்சத்திரங்களில் உள்ள பாலின வகைகளை எடுத்து கூறுகிறது. முக்கிய பொருத்தங்களை அறியத் தருகிறது.ஜாதகம் இல்லாதோருக்கு, நட்சத்திரம், ராசியால் பொருத்தம் பார்க்க வேண்டும் என்கிறது. மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் நட்சத்திரங்களுக்கு, பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என அறிவுரைக்கும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து