/ கவிதைகள் / நட்பால் விளைந்த நறுந்தமிழ்
நட்பால் விளைந்த நறுந்தமிழ்
நண்பர்களுக்கு எழுதிய கவிதை மடல்களின் தொகுப்பு நுால். சிரமம் என்ற வடசொல்லுக்கு தமிழில் தொல்லை, துன்பம், கடினம், கடுமை, உழைப்பு களைப்பு என்பவை பொருளாக தரப்பட்டுள்ளன. ‘வெற்றி வந்து பற்றி படர வேண்டுமானால் முயற்சியே நலம்’ என்பது போன்று எந்த நிலையிலும் பிரெஞ்சு நாட்டவர், ஆங்கிலம் கலந்து எழுதுவதோ, பேசுவதோ இல்லை என்ற தகவலை கூறுகிறது. ஓர் என்பது எப்படி கையாள வேண்டும் என கற்பிக்கிறது. அபிராமி அந்தாதியை போற்றுகிறது. தமிழ் மரபுக் கவிதைகளை கற்க விரும்புவோருக்கு அதுகுறித்து புத்தகம் எழுதியவர், பதிப்பாளர் முகவரியின் பட்டியல் தரப்பட்டு உள்ளது. கவிதை உலகில் கலக்க விரும்புவோருக்கு ஏற்ற வழிகாட்டி புத்தகம். – சீத்தலைச் சாத்தன்