/ கதைகள் / நட்புக்கு இலக்கணமாகத் திகழும் சிவசுந்தரம்

₹ 150

இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு நுால். நண்பர்கள் இருவர் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தொடர்பாக எடுக்கும் முடிவு எப்படி சிதைகிறது, முடிவில் எப்படி கல்யாணத்தில் முடிகிறது என்பது தான் கதை. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. எட்டே அத்தியாயங்களில் நிறைவடைகிறது. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள் எனச் சுழலும் கதைக்களத்தின் போக்கில் விவசாயத்தின் பெருமையும் வெளிப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் நண்பன் மீது சந்தேகப்படாத பெருந்தன்மை, கதையை நகர்த்திச் செல்கிறது. இரண்டாவது குறுநாவல், இந்திய மண் மணத்தை காட்டுகிறது. பெண், மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை