/ ஜோதிடம் / நவகிரகங்களின் நல்ஆக்கம்
நவகிரகங்களின் நல்ஆக்கம்
நவகிரகங்களின் தன்மை, ராசிகள், நட்சத்திரங்கள் வாழ்வில் செய்யும் மாற்றங்களை கூறும் நுால். கிரகங்களின் உச்ச, நீச, பகை, நட்பு, ராசிகளின் விளக்கம், திதி, யோகம், கரணம், தசாபுத்தி விபரங்கள் உள்ளன. பிறந்த தேதியை வைத்து ஜாதகம் கணிக்கும் முறை கூறப்பட்டுள்ளது. கணினிபடி ஜாதக பலன் சொல்லும் முறை, வேதை அல்லது எதிரிடையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறது. உலக போர், மழை விபரம், பூகம்ப பாதிப்பு, வாஸ்து, மனையடி சாஸ்திரம், தேர்தல் வெற்றி போன்றவற்றுக்கு விளக்கம் சொல்கிறது. ஜோதிடம் கற்று, துன்பத்தை முன்கூட்டியே கணித்தால் ஆபத்தின்றி வாழலாம் என்கிறது. நவகிரகங்களின் ஆதிக்கம், வாழ்வில் அவை தரும் ஆக்கம் பற்றிய நுால். -– முனைவர் மா.கி.ரமணன்




