/ கட்டுரைகள் / நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்

₹ 200

வாழ்க்கையில் கசப்பு நேரும் போது, ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு இயற்றப்பட்டுள்ள நுால்.பிரச்னைகளுக்கான தீர்வுகளை, புராணத்தில் இருந்து எடுத்ததில் ஒரு மறைபொருளும் இருக்கிறது. புராணம் என்றால் பழமையும் புதுமையும் கலந்தது என்பர். ஆம்... பிரச்னைகள் யுகத்துக்கு தகுந்தவாறு புதிதாக முளைக்கும். அதை பழமையின் வாயிலாக தீர்த்து வைப்பது ஒரு வகை மருத்துவம்.இதுபோன்ற கதைகளை அக்காலத்தில், தாத்தாக்கள் தங்கள் பேரன்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். இதை இன்றைய இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. – தி.செல்லப்பா


சமீபத்திய செய்தி