/ கதைகள் / நீ மகராசியாயிரு ஜானகி

₹ 70

எக்காலத்திற்கும் ஏற்ப எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இயலாமையால் மருமகளை நிந்திக்கும் மாமியார் அந்திம காலத்தில் வருந்தி, ‘மகராசியாயிரு...’ என வாழ்த்துவது நெகிழச் செய்கிறது. கலங்கிய உள்ளம் கொண்ட கணவனையும் இன்புறச் செய்யும் சக்தி பெண்ணுக்கு உண்டு என்பதை நிரூபிக்கிறது. இருளில் வழி தவறாமல் நடக்க, கல்யாணம் என்ற விளக்கை ஏந்த வேண்டும் என்கிறது. இயற்கை சிருஷ்டியில் மனிதன் சிலந்தியாக இருக்கிறான். மனிதன் மற்ற பிராணிகளை சித்திரவதை செய்யும் வழக்கத்தை வைத்திருப்பதை வெளிப்படுத்தும், ‘ஜெயில் கைதி’ சிறப்பானது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை