/ சிறுவர்கள் பகுதி / நீலியின் பயணம்
நீலியின் பயணம்
வீரம், விவேகம் உடைய பழங்குடி சிறுமியின் சாகசத்தை விவரிக்கும் சிறுவர் நாவல். குடிசையில் வசிக்கும் சிறுமி நீலியும், விஜயாபுரி பேரரசின் இளவரசி கயல்விழியும் தோழியர். கயல்விழியை மர்ம நோய் தாக்க, பழங்குடியின மூதாட்டி ‘அப்ரமாஞ்சி’ என்ற மூலிகையால் குணப்படுத்த முடியும் என்கிறார். தோழியை காப்பாற்ற, தொலைவில் நடுக்காட்டில், நீலி, சம்பி, கொடுவன் ஆகிய சிறார்கள், மூலிகை பறிக்க புறப்படுகின்றனர். பயணத்தில் தடைகள், சவால்களை கடந்து, மூலிகையை பறித்து வந்தனரா, கயல்விழி காப்பாற்றப் பட்டாரா என கதை விடை காண்கிறது. பழங்குடி மக்களின் நம்பிக்கை, விடாமுயற்சி, அறத்துடன் வாழ்வது இதில் பிரதிபலிக்கிறது. சிறுவர் – சிறுமியர் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலான நாவல். – டி.எஸ்.ராயன்




