/ புத்தக மதிப்புரை / நீங்களும் வாங்கலாம் நுாற்றுக்கு 100

₹ 125

தேர் வுகளை சிறப்பாக எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகளை கூறும் நுால். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன. கற்பதில் ஆர்வம் ஏற்படுவதற்கு உரிய வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. படிப்பதில் ஆர்வம், வளர்ப்பதற்கும், நல்ல பழக்கங்களை கைக்கொள்வதற்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி வழிகாட்டுகிறது. படிப்பதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டியவை, தேர்வு காலத்தில் நினைவில் பதிக்க வேண்டிய முக்கிய செயல்பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ள நுால். – ராம்


புதிய வீடியோ