/ பயண கட்டுரை / நெஞ்சை அள்ளும் நேபாளம்

₹ 150

திரிவேணி, முக்திநாத் போன்ற புண்ணிய தலங்கள் நிறைந்த நேபாளம் பற்றிய நுால். வைணவர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருமே தரிசிக்க வேண்டிய தலங்கள் நிறைந்துள்ளதை குறிப்பிடுகிறது. இயற்கை தரும் பூரிப்பை அனுபவிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம் உள்ளதை குறிப்பிடுகிறது. புத்தர் பிறந்த தேசம் என பெருமையுடன் குறிப்பிடுகிறது. சாளக்கிராமங்கள் கிடைக்கும் கண்டகி நதியும் நேபாளத்தில் தான் உள்ளது. அங்கு வனத்துறை பொறுப்புடன் செயல்படுவதால், மரம் கடத்தல் கிடையாது. அதனால் இயற்கை கொலு இருக்கிறது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி தீர்த்தம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வராஹ க்ஷேத்திர பெருமையும் உள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய தலங்கள் குறித்த நுால். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ