/ புத்தக மதிப்புரை / நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்!

₹ 650

நேரத்தை சரிவர நிர்வகிக்கும் வழிமுறைகளை கற்பிக்கும் நுால். மற்றவர்களின் நேரத்தை களவாடாமல் பயன்படுத்தும் கலை பற்றி பகிரப்பட்டுள்ளது. ஒரு நிமிட மூச்சுப்பயிற்சி கூட கணங்களை மாற்றக்கூடியதாக அமையும் என்கிறது. விடுமுறை நாட்களையும், பயண நேரங்களையும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு தக்க ஆலோசனை தருகிறது. நேர்த்தியான ஒழுங்குமுறையின் அவசியத்தை கூறுகிறது. எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது என்று சொல்பவரே உண்மையான நிர்வாகி என மதிப்பிடுகிறது. நட்புக்கும், குடும்பத்திற்கும், உடல் நலம் பேணவும், பொழுதுபோக்கிற்கும் நேரத்தை திட்டமிடல் வேண்டும் என்று கூறுகிறது. கடிகாரத்தை பொருட்படுத்தாமல் கடமையை உணர்வதற்கு ஆலோசனை கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை