/ பயண கட்டுரை / நியூயார்க் பக்கங்கள் (பாகம் - 2)
நியூயார்க் பக்கங்கள் (பாகம் - 2)
அமெரிக்க பயண அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். புரூக்ளின் மருத்துவமனை போன்ற பதிவுகள் காட்சியாக உள்ளன.நியூயார்க் நகரில் கொண்டாடப்படும் தீபாவளி, அங்கு நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. பலவித மனிதர்கள் பற்றிய செய்தி தொகுப்பாக உள்ளது.பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது, ‘பரதேசி பார்த்த பரதேசி போன்ற தலைப்புகளில் கலகலப்பான நகைச்சுவை சம்பவங்கள் உள்ளன. ‘பேண்டம் ஆப் தி ஆபரா’ என்ற நாடகம் பற்றிய விவரிப்பு, அந்நாட்டு நாடகக் கலையை அறிமுகம் செய்கிறது. பாதாள ரயில் திட்ட சிறப்பை அறிவிக்கிறது. அமெரிக்க பண்பாட்டை விளக்கும் நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்