/ தீபாவளி மலர் / ஓம்சக்தி தீபாவளி மலர் 2025

₹ 125

ஆன்மிகம் மற்றும் வித்தியாசமான தகவல் உடைய கட்டுரை, கதைகளுடன் மலர்ந்துள்ளது ஓம்சக்தி தீபாவளி மலர். இந்திரா பிரதமராக இருந்த போது வறுமை ஒழிப்புக்கு 20 அம்ச திட்டத்தை செயல்படுத்தினார். அந்த திட்டத்துக்கு முன்னோடியாக அமைந்த தமிழக ஆதீன மடம் குறித்த சிறப்பு செய்தியுடன் துவங்குகிறது. தமிழரின் விதிகோட்பாடு குறித்து விரிவான கட்டுரை ஒன்று பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் அமைந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமான செஞ்சிக் கோட்டை குறித்த கட்டுரை, உரிய படங்களுடன் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்ற தலைப்பில் தெளிவாக தரப்பட்டுள்ளது. பல்சுவையுடன் மிளிர்கிறது ஓம்சக்தி தீபாவளி மலர். – மதி


புதிய வீடியோ