/ புத்தக மதிப்புரை / ஒரு கற்றை மயிர்

₹ 150

பெண்கள் மீதுள்ள சமூக பார்வை, திருநங்கையரின் வலி, குடும்ப உறவை சுட்டிக்காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேருந்தில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் கொடுக்கும் மருதனுக்கு இறுதியில் என்ன நடந்தது என, ‘செவ்வானம்’ கதை எச்சரிக்கையாகச் சொல்கிறது. திருநங்கையரின் எதிர்பார்ப்புகள், அவர்களின் அவலங்களை, ‘கூட்டுப்புழு’ கதை சுட்டிக் காட்டுகிறது. ஓட்டப்பந்தயத்தில் உலகச் சாதனை படைக்கத் துடிக்கும் வேங்குழலி காதல் வயப்பட்டு யாரை திருமணம் செய்தார், சகோதரியின் இறப்புக்கு காரணம் யார், உலகச் சாதனை படைத்தாரா என, ‘ஓட்டம்’ கதை விடை கூறுகிறது. எட்டாம் வகுப்பும் இட்லியும், சியா, எச்சில் கை, பேறு என மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள கதை நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை