/ கவிதைகள் / ஒரு பாத்திரத்தோடு பாத்திரம்

₹ 145

கதையை கவிதையில் வடித்து காட்டும் நுால். ஒரு பாத்திர வியாபாரியும், அவரது நாயும் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பிடித்துள்ளன. கதை, கவிதையில் வந்து போகும் பாத்திரங்கள் பல உள்ளன. குப்பை மேட்டு நாய் வாலாட்டியபடி மனிதனுக்கு தோழனாய் பயணத்தை தொடர உதவுகிறது. அந்த நாயின் செயல்பாட்டை மையப்படுத்தி கதை முடிவடைகிறது. மழை பெய்த பின் சாலையின் கோலத்தை படம் பிடிக்கும், ‘தார் சாலையெல்லாம் நீர் சாலையானதால் பட்டத்தின் வால் போல வளைந்து நெளிந்திருந்தது’ என சாலையில் பறக்கும் பட்டம் வாலுடன் பொருத்தி சொல்கிறது. சைக்கிள் பஞ்சரானதும் கற்பனையுடன் கவிதையாக ஆக்கப்பட்டுள்ளது. கற்பனையில் உச்சம் தொடும் கவிதை நுால். -– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை