/ புத்தக மதிப்புரை / ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன்
ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன்
கம்ப ராமாயணம் பாலகாண்டத்தில் உள்ள பாடல்களுக்கு, உலகியல் சார்ந்த விளக்கத்தை தரும் நுால். திரைப்பட பாடல்களுடன், சில திரைப்படங்களின் பெயரையே கட்டுரை தலைப்பாக தந்துள்ளது பொருத்தமாக உள்ளது. தலைப்பும், பாடல்களும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டு உள்ளன. கம்பனின் கவிதை நயங்கள் அலசலுடன் தரப்பட்டுள்ளன. கம்பன் கவிதைக்குரிய கருத்துக்கள் உலக நடப்போடு பொருந்திக் காட்டப்பட்டுள்ளன. அனுமன் வானத்தில் பறந்தபோது நடந்த நிகழ்வுகள் வியக்கும் வண்ணம் வர்ணிக்கப்பட்டு உள்ளன. தேவர்கள் சென்ற விமானங்கள், காற்றின் வேகத்தால் கடலில் விழுந்ததாக குறிப்பிடுகிறது. அனுமன் வாலில் வைத்த தீ பற்றியும் உருக்கமாக விளக்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்




