/ பழமொழிகள் / படத்தைப் பாருங்கள் பழமொழியைச் சொல்லுங்கள்!

₹ 100

படங்களைக் காட்டி புத்திக்கு விருந்து படைத்துள்ள நுால். முதலில் பெண் படம், இரண்டாவது மீசை படம், மூன்றாவது துளிர்விடும் படம், நான்காவது ஆண் படம். இவற்றில் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும். மீசை தான் முக்கியமென கொண்டால், கொஞ்சம் மூளையை கசக்கினால் விடை கிடைக்கும். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா. இன்னொன்று, சீனி, உப்பு ஸ்பூனுடன் அடுத்தது, ‘நோ’ என்ற படம். மூன்றாவது வடகம், நான்காவது நவீன குப்பை தொட்டி. குப்பை தொட்டி படத்தை முக்கியமாக எடுத்துக் கொண்டால், உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே வந்து விடும். பொழுதுபோக்க தீனி தரும் புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்


சமீபத்திய செய்தி