/ ஆன்மிகம் / பக்திச்சுனை அமுதம்: மலர் 6 நாராயணீயம்
பக்திச்சுனை அமுதம்: மலர் 6 நாராயணீயம்
குருவாயூர் கோவிந்தன் வரலாற்றை தந்துள்ள நுால். சமஸ்கிருதத்தில் நாராயணீயம் பாகவத புராண அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. பக்தி பரவசமும், வேதாந்த கருத்துகளும் நிறைந்துள்ளது. பாவமும், அர்த்தமும் குறையாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நுாறு தசகங்கம், ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. பகவான் வைபவம், இனிய திருமேனியின் பெருமை, ரிஷப தேவர் சரித்திரம், மஹாலக்ஷ்மி அவதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. படிப்போருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தை தருவதாக கூறும் ஆன்மிக நுால். -– புலவர் சு.மதியழகன்