/ வர்த்தகம் / பண்டை தமிழரின் வணிகம்

₹ 180

பண்டை காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற வணிக நடைமுறைகளை எடுத்துக்காட்டும் நுால். வரலாறு மற்றும் பழந்தமிழ் இலக்கிய ஆதாரங்களை மேற்கோளாக காட்டுகிறது.பழந்தமிழகத்தில் வியாபாரம் செய்ய, உலகின் பல பகுதிகளிலும் இருந்து வணிகர்கள் வந்து சென்றது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வாங்கி சென்ற பொருட்கள், கொண்டு வந்து விற்ற பொருட்கள் குறித்த விபரங்கள் உள்ளன. அதற்கு, பழந்தமிழ் நுால்களில் இருந்து உரிய ஆதாரம் திரட்டித் தரப்பட்டுள்ளது.வியாபார நகரங்களான ஆதிச்சநல்லுார், தொண்டி, கொற்கை, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் உட்பட அங்கு வந்து சென்ற கப்பல்கள், துறைமுகம் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. தமிழர்களின் வாணிப சிறப்பை எடுத்துரைக்கும் நுால்.– விநா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை