/ கம்யூனிசம் / பண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
பண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
அயோத்திதாச பண்டிதர், முருகேச பாகவதர் பண்பு நலம், சமூகப் பார்வை பற்றி பேசப்பட்டுள்ள நுால். சுரண்டல் வடிவங்கள், சமுதாயத்தை பிரித்துப் பிரித்து சிதைத்ததை ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. அயோத்திதாசர் புத்த மதம் தழுவியதை விவரிக்கிறது. பல்துறை அறிவு, பன்மொழிப் புலமை பெற்றிருந்ததை அறியத்தருகிறது.தீபாவளி பண்டிகைக்கு தரும் விளக்கம் புதுமை. அயோத்திதாசரின் பொருளாதார பார்வை, போதை வஸ்துக்கள் மீது வரி விதிப்பு பற்றி கருத்துகளை தொகுத்து தருகிறது. மற்றொரு ஆளுமை முருகேச பாகவதர் பற்றியும் விரிவான செய்திகளை உடைய நுால்.– டாக்டர் கார்முகிலோன்