/ வாழ்க்கை வரலாறு / பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை சரிதம் நுால். பிறந்த, இறந்த தேதி ஒன்றாக இருந்ததை கூறுகிறது. பிறந்து ஆறு மாதம் ஆனபோது இறைவனடி சேர்ந்தார் அம்மா. அக்காவின் வளர்ப்பு பிரம்மச்சரியம் காக்க வைத்ததாகக் குறிப்பிடுகிறது. காங்கிரசில் உறுப்பினராகவும், நேதாஜியின் வலது கரமாகவும் திகழ்ந்தார். அகிம்சைக்கும், வீரத்துக்குமான வித்தியாசத்தை குறைத்தது பற்றி கூறியுள்ளது. காலையில் நீராகாரம், நண்பகல் உணவு, இரவு பசும்பால் என்பது தான் அவரது உணவு. ஆங்கிலேய அரசு இதை மாற்றியதால் பிணி தொட்டது என கூறுகிறது. குற்றப் பரம்பரை, வாய்ப் பூட்டு சட்டம் என ஆங்கிலேய அரசு ஏவியவற்றை ஜெயித்ததை கூறும் நுால்.– சீத்தலைச்சாத்தன்