/ கட்டடம் / பட்டா முக்கிய அரசாணைகள் – 100
பட்டா முக்கிய அரசாணைகள் – 100
பட்டா என்ற நில உரிமை ஆவணம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 அரசாணைகளின் உண்மை நகல்களுடன் பதிப்பிக்கப் பட்டுள்ளது. விழாக்களில் தமிழ்,தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணை பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள நில வகைகள் குறித்து விளக்கம் தருகிறது.தொடர்ந்து பட்டா தொடர்பான அரசாணைகளும், சுற்றறிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றின் நகல் ஒளிப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆணை விபரங்கள் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கிய நில ஆவணமான பட்டா குறித்து முழுமையான அறிவைத் தரும் நுால். நில உரிமையாளர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டியது.– ஒளி