/ புத்தக மதிப்புரை / பட்டணத்து சம்பந்தம்
பட்டணத்து சம்பந்தம்
சமூகத்தை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையின் தலைப்பே புத்தக தலைப்பாகியுள்ளது. நேர்மையாக உழைக்காதவர்களின் திருமண சம்பந்தம் வேண்டாம் என்று கூறுகிறது ஒரு கதை. அறிமுகம் இல்லாமல் அலைபேசி வழியாக காதலிப்பது தவறு என்பதை எடுத்துரைக்கிறது. ஓட்டுக்காகப் பணம் வாங்குவது குற்றம் என வலியுறுத்துகிறது. உடலால் பாதிக்கப்பட்ட பெண்ணை, மனைவியாக ஏற்றுக்கொள்வது உயர்ந்த பண்பு என்கிறது. திருமண வாழ்வே நல்ல பண்பாடு என எடுத்துரைக்கிறது ஒரு கதை. அற்ப சுகத்திற்காக நெறி பிறழ்வது உயிரை பறித்துவிடும் என எச்சரிக்கிறது. குறையில்லாத வாழ்க்கையும் இல்லை-, குற்றம் செய்யாத மனிதரும் இல்லை போன்ற கருத்துக்களை முன்வைக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து




